சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ், அவரது மகன் விவேக், விவேக்கின் சட்டத்தரணி; அமலநாதன் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் மூவரும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கோடிக் கணக்கில் கறுப்புப் பணத்தையும், தங்கக் கட்டிகளையும் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில், தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீடு, அலுவலகம், உட்பட 13 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்திய வேளை பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.