குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய விளையாட்டு வீர வீராங்கனைகள் மீது மீளவும் ஊக்க மருந்து பயன்பாட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்ற 28 ரஸ்ய வீர வீராங்கனைகள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வீர வீராங்கனைகளின் சிறுநீர் மாதிரிகள் தொடர்பில் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சிறுநீர் மாதிரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் வீர வீராங்கனைகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீர வீராங்கனைகளின் சிறுநீர் மாதிரிகள் மீளவும் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
சில வீர வீராங்கனைகளின் சிறுநீர் மாதிரிகளில் உப்பு, கோப்பி போன்ற பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாகவும் பெண் ஐஸ் ஹொக்கி வீராங்கனைகளின் சிறுநீர் மாதிரிகளுக்கு பதிலாக ஆண்களின் சிறுநீர் மாதிரிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.