குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லிணக்கம் குறித்த அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக நல்லிணக்க பொறிமுறைமைக்கான செயலணி குறிப்பிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னதாக இவ்வாறு கருத்து கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரையில் சுமார் 7500 யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இந்த செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். பரிந்துரைகள் உள்ளடங்களாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.