191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பங்களாதேஸில் போராட்டத்தில் ஈடுபட்ட 1500 ஊழியர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர். பாரியளவில் தொழிற்சங்கப் போராட்டமொன்றில் ஈடுபட்ட சுமார் 1500 பணியாளர்கள் பணி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆடைக் கைத்தொழிற்சாலைகளில் கடமையாற்றி வரும் ஊழியர்களே இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை இந்த தொழிற்சங்கப் போராட்டத்தை வழிநடத்திய சில முக்கிய தலைவர்களையும் ஆடைக் கைத்தொழிற்சாலைகளில் ஊழியர்கள் எதிர்நோக்கி வரும் அவலங்கள் தொடர்பில் செய்தி அறிக்கையிட்ட ஊடகவியலாளர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Spread the love