புஸ்ஸல்லாவையில் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி 07 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரட்டைபாதை நயாபான தோட்டம் அட்டபாகை பிரிவில்; நேற்று (27) மாலை தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது தேயிலை செடியில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்து தொழிலாளர்களை தாக்கியதில் 07 பேர் பலத்த குளவி கொட்டுதலுக்கு உள்ளாகி புஸ்ஸல்லாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் உள்ளடங்குகின்றனர் மூவர் சிகிக்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் பலத்த குளவி கொட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மலையகத்தில் தோட்ட புறங்களின் அதிக குளவி கூடுகள் காணப்படுவதால் இவ்வான அணர்தங்கள் அடிக்கடி ஏற்படுகின்றது. இதை இல்லாமல் அழிக்க தக்க வேலைத்திட்டங்களை முன் எடுக்க வேண்டும் என குளவி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.