குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது நிதி ரீதியான அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை ஆரோக்கியமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையானது உலக நாடுகள் மீதும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீதும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை மேலும் வலுக்கச் செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பினை உருவாக்குவதில் அமெரிக்காவிற்கு மிக முக்கியான பங்களிப்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஏதேச்சாதிகாரமான போக்கில் அமெரிக்கா செயற்பட முயற்சிப்பது ஆபத்தானதாக அமையக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.