குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கொலம்பிய ஜனாதிபதி Juan Manuel தமக்கு கிடைக்கப் பெற்ற நோபல் சமாதான விருது பரிசுப் பணத்தை கடந்த 52 ஆண்டுகளாக அந்நாட்டில் இடம்பெற்று வந்த சிவில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோர் நலன் திட்டத்திற்காக வழங்கியுள்ளார்.
கடந்த மாதம் பார்க் தீவிரவாதிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டமைக்காக, கொலம்பிய ஜனாதிபதிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இந்த சமாதான உடன்படிக்கை தொடர்பில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் சமாதான உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
இந்த சிவில் யுத்தத்தில் 2லட்சத்து 60,000 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நோபல் சமாதான விருதின் ஊடாக தமக்கு கிடைக்கப் பெற்ற 925000 டொலர்களை, சிவில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி Juan Manuel தெரிவித்துள்ளார்.