Home இலங்கை பசில் ராஜபக்ஸவின் காணியை ஏலத்தில் விற்பனை செய்யுமாறு உத்தரவு

பசில் ராஜபக்ஸவின் காணியை ஏலத்தில் விற்பனை செய்யுமாறு உத்தரவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் மல்வான பிரதேசத்தில் அமைந்துள்ள  காணியை ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் காணியை சட்டவிரோதமான முறையில் பசில் ராஜபக்ஸ கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் இந்தக் காணியின் உரிமை தமக்குக் கிடையாது என பசில் ராஜபக்ஸ நீதிமன்றில் தெரிவித்துள்ள நிலையில் இந்தக் காணிக்கு உரிமை கோர வேறு எவரும் முன்வரவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காணியை ஏலத்தில் விற்பனை செய்யுமாறு அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் விடுத்த  கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் காணியை ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More