சீனாவில் நடைபெற்று வருகின்ற ஷங்காய் மாஸ்டேர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று இடம்பெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முதற்தர வீரரான சேர்பியாவின் ஜோகோவிச் தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரொபர்டோ போடிஸ்ரா அகுத்(Roberto Bautista Agut )திடம் தோல்வியை சந்தித்துள்ளார். மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் அகுத் 6-4 , 6-4 என்ற நேர்செட்டில் ஜோகோவிச்சை தோல்வியடையச் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். கோவிச்சுடன் 6-வது முறையாக போட்டியிட்ட போடிஸ்ரா அகுத், பெற்ற முதல் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு அரை இறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் அன்டி முர்ரே 6-4, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்சின் ஜிலெஸ் சிமோனை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு சென்றுள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அன்டி முர்ரே-பாடிஸ்டா அகுத் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.