குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டிருந்த தில்ருக்ஸி நாடு திரும்பயதும் தமது பதவி விலகல் கடிதத்தை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். தமது ராஜினாமா கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தில்ருக்ஸி தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்ருக்ஸி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமானவர் என்பது குறப்பிடத்தக்கது. தில்ருக்ஸின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது பற்றிய விரபங்கள் வெளியிடப்படவில்லை. பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் தற்போது வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.