Home இலங்கை நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  யாழ்ப்பாணம்

நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் இரு மணிநேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி து.சசிக்குமார் மீது கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடாத்தி இருந்தார்.

அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் கடமையில் இருந்த பொறுப்பதிகாரி மீது அலுவலகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த நபர் தாக்குதல் மேற்கொண்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனை அடுத்து அன்றைய தினம் மாலை தாக்குதல் நடாத்திய சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
14729125_673339349491651_2129394394691620852_n
கைது செய்யபட்ட சந்தேக நபர் மறுநாள் புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த ப்பட்டு நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப் பட்டு இருந்தார். அந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் இரு மணி நேர பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

14725646_673339926158260_4095490648535020274_n

14642026_673339576158295_2247334278100259305_n 14670792_673340006158252_9046945514926934229_n 14720563_673339589491627_6150502751762326132_n 14720603_673340059491580_3698022574530318199_n  14729125_673339349491651_2129394394691620852_n

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More