177
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி வடமாகாணம் முழுவது இன்றைய தினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சபை என்பவற்றின் பேருந்துக்கள் சேவையில் ஈடுபடவில்லை. இதனால் மக்கள் நடமாடாட்டம் இன்றி யாழ் நகர் வெறிச்சோடி போயுள்ளது.
Spread the love