Home இலங்கை பொலிசாரின் சமிஞ்சையை மீறினால் குறைந்த பலப் பிரயோகமே பயன்படுத்த முடியும் – சி.வி.விக்னேஸ்வரன்

பொலிசாரின் சமிஞ்சையை மீறினால் குறைந்த பலப் பிரயோகமே பயன்படுத்த முடியும் – சி.வி.விக்னேஸ்வரன்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்.

பொலிசார் தமது சமிஞையை மீறி  இரு இளைஞர்களும் பயணித்தார்கள் என்றபடியால் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருந்தார்களேயானால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆகக் குறைந்த பலப் பிரயோகமே நடத்தபப்ட்டு இருக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக்குறிப்பிலையே அவ்வாறு குறிபிட்டு உள்ளார்.  மேலும் அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது ,

இரு பல்கலைக்கழகமாணவர்களின் அநியாயமானஅகாலமரணம் ஆழ்ந்ததுயரத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. எந்தச் சூழலில் எதற்காக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது என்பதை நாங்கள் ஆய்ந்தறிந்துகொள்ளவேண்டும். பொலிசார் தமது சமிஞ்சையை மீறி இரு இளைஞர்களும் பயணித்தார்கள் என்றபடியால் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருந்தார்களேயானால் இவ்வாறானசந்தர்ப்பங்களில் ஆகக் குறைந்தபலப் பிரயோகம்  நடாத்தப்படவேண்டும் என்ற நிபந்தனையைமீறிவிட்டார்கள் போன்றே தெரிகின்றது.

இது பற்றி நீதவான் ஆராய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பார் என்று நம்புகின்றேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் அவரின் அறிக்கை வந்துள்ளதோ என்பதை அறியேன். அவரின் அறிக்கையைப் பரிசீலித்த பின்னரே சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் பொறுப்பான   என்ற வகையில் நான் எனது கருத்தை வழங்க முடியும். எனினும் இவ்வாறான செயல்கள் இனி மேலாவது நடைபெறாது பார்த்துக் கொள்ளல் எமது கடமையாகின்றது.

இறந்தவர்களின் உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரத்தில் இத் துன்பச் சூழலில் எமது இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரும் பொறுமை காக்க வேண்டுகின்றேன். எமது உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளைநாங்கள் எம் மனதில் நிறுத்தியேநடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.என மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva. October 25, 2016 - 4:53 pm

திரு. சம்பந்தன், திரு. மகிந்த ராஜபக்ஷ மற்றும் சில இனவாதிகள் வரிசையில் திரு. விக்னேஸ்வரனும் கூட, பொலிஸாரின், ‘நிறுத்தும்படி கோரிய சமிக்ஞையை’, மதிக்காமையே துப்பாக்கிப் பிரயோகத்துக்கான காரணம் என்பது போலவும், பொலிஸாரின் அந் நடவடிக்கை தவறானது, என்பது போலவும் அறிக்கை விடுக்கின்றார்கள்! இப்படி ஒரு சம்பவம் நடந்ததென்பதை எப்படி நம்புவது? குறித்த மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார்கள், என்ற விடயமே மறுநாள் மாலையில், அதுவும் பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்ட பின்பே, அது தெரிய வந்திருக்கின்றது! ஆக, போலீசார் இதை ஒரு விபத்தாகக் காட்டவே முயன்றிருக்கின்றார்கள்! மேலும், பல விதங்களிலும் தடய அழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள்? குறித்த பிரதேசத்தில் வெற்றுத் துப்பாக்கி ரவைகளைக் கூடக் கண்டெடுக்க முடியவில்லை? அப்படிப்பட்ட போலீசார், மாணவர்களை நிறுத்தும்படி கோரியதான அவர்களின் வாக்குமூலத்தை மட்டும் எப்படி நம்ப முடியும்?

ஆக, இது எதோ ஒரு காரணத்துக்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு படுகொலையாகவே இருக்க முடியும்? இரண்டு பலம் பொருந்திய அதிகார மட்டங்கள், தமிழனைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகின்ற வரையில், நல்லாட்சியில் கூட(?) இதற்கான நியாயமான விசாரணையையோ அன்றித் தீர்ப்பையோ எதிர்பார்க்க முடியாது? ஆக, ‘பத்தோடு ஒன்று, பதினொன்றாக’, இதுவும் கடந்து போகுமென நம்பலாம்!

Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More