190
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் கெரோன் பொலார்ட் சிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள மும்முனை ஒருநாள் போட்டித் தொடரிற்கான குழாமிலிருந்து, பொலார்ட் நீக்கப்பட்டுள்ளார்.அணியிலிருந்து நீக்கப்பட்டமை பொலார்ட்டை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
தம்மை அணியிலிருந்து நீக்கிய தீர்மானம் நகைப்பிற்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். அணியின் தேர்வாளராக முன்னாள் விக்கட்காப்பாளர் கேட்னி பிறவுன் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love