195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஒற்றுமையாக வாழ்வதே சவால் மி;க்கது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிளவடைந்திருப்பது மிகவும் சுலபமானது என தெரிவித்துள்ள அவர் சமாதானத்துடனும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அனைவரும் திடசங்கல்பம் பூண வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இருள் அகன்று அனைவர் இதயங்களிலும் ஒளி பிரகாசிக்கும் இனிய தீபாவளியாக இந்த தீபாவளி பண்டிகை அமைய வேண்டுமென அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Spread the love