393
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு எட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் இரண்டு விமான சேவை நிறுவனங்களை இயக்குவதற்கு எடுத்த தீர்மானம் பிழையானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஒரு விமான சேவையின் ஊடாகவேனும் லாபமீட்ட முடியாத நிலைமை காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே மஹின் லங்கா விமான சேவை நிறுவனம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துடன் இணைக்கத் தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love