Home இலங்கை20 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப உள்ளனர்

20 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப உள்ளனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

20 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப உள்ளனர். எதிர்வரும் வாரத்தில் இந்த அகதிகள் இலங்கை திரும்ப உள்ளதாக புனர்வாழ்வு, புனரமைப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். தன்னார்வ அடிப்படையில் இந்த அகதிகள் இலங்கைக்கு திரும்ப உள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் இதற்கான உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னார்வ அடிப்படையில் அகதிகள் நாடு திரும்புவதனை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்ப உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More