பசுபிக் தீவுகளில் உள்ள அவுஸ்திரேலியாவின் தடுப்பு மையங்களில் உள்ள புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோர் பரிசீலனை மையங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனத் தெரிவித்துள்ள அவர் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் எப்போது மீள்குடியேற்றப்படுவார்கள் போன்ற தகவல்களை வெளியிடவில்லை.
பப்புவா நியு கினியா மற்றும் நவ்ரு தீவுகளில் உள்ள முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்தோர் இந்த மீள்குடியேற்ற ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அதேவேளை மனித உரிமை ஆர்வலர்களும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர். எனினும் தற்போது ; அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதனை ஏற்றுக்கொள்வாரா என்பது குறித்தும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.