குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வீதிப் போக்குவரத்து விதி மீறல் தொடர்பிலான அபராதத் தொகையில் மாற்றமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வீதிப் பாதுகாப்பு குறித்த விதிகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் வீதிப் போக்குவரத்திற்கு மதிப்பளிக்கப்படுவதில்லை எனவும் இது மிகப் பெரிய ஓர் பிரச்சினையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வரவு செலவுத்திட்ட யோசனையில் அதிகளவு முன்மொழிவுகள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கான குறைந்தபட்ச அபராதம் 2500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ஆயிரக் கணக்கான சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.