Home இலங்கைதமிழ் மொழியை பேச முடியாமையையிட்டு வெட்கப்படுகின்றேன் – டலஸ் அழப்பெரும

தமிழ் மொழியை பேச முடியாமையையிட்டு வெட்கப்படுகின்றேன் – டலஸ் அழப்பெரும

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தமிழ் மொழியை பேச முடியாமையை இட்டு வெட்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். இலங்கையில் காணப்படும் இரண்டு பிரதான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை பேச முடியாமை வருத்தமளிப்பதாகவும் 21 மில்லியன் மக்கள் வாழ்ந்து வரும் இலங்கையில் இரண்டு மொழிகளே பயன்பாட்டில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களினால் சிங்கள மொழியை பேச முடியாத நிலைமை நீடித்து வருவதாகவும் இவ்வாறு மொழியறியின்மைக்கு பெற்றோரோ பாடசாலைகளோ காரணமில்லை எனவும் 1948ம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More