இந்தியாவின் மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது மாநில அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் தலைமை செயலகம் மற்றும் அதன் அருகாமையில் இருக்கும் பால்சிட் மற்றும் தங்குனி ஆகிய சுங்கச்சாவடிகளில் இராணுவ வீரர்களை குவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு கணடனம் வெளியிட்டே அவர் போராட்டத்தை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரநிலையை விட இது மிகவும் மோசமாக சூழ்நிலை எனத் தெரிவித்த மம்தா சுங்கச்சாவடிகளில் இருந்து ராணுவ வீரர்கள் அகற்றப்படும்வரை மேற்கு வங்காளம் மாநில தலைமைச் செயலகமான நபான்னாவில் இருந்து வெளியேற மாட்டேன் என தெரிவித்து இன்று அதிகாலைவரை தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையிலேயே தங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கு போர் போன்ற ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாகியதனால்தான்; அப்பகுதியில் செல்லும் வாகனங்களை தமதாக்கி ராணுவத்தின் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக ஒத்திகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.