தென்கொரிய ஜனாதிபதி பார்க் குவென் ஹைக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதியாக நீடிப்பதா, இல்லையா என்பதை அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் முடிவு செய்யும்.
மொத்தமாக உள்ள 300 உறுப்பினர்களில் 234 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 56 பேர் எதிராக வாக்களித்துள்ளதுடன் 7 வாக்குகள் செல்லுபடியற்றவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. .
இதன்மூலம் ஜனாதிபதி பார்க் குவென் ஹைக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் பெரும் பான்மை ஆதரவுடன் நிறைவேறி யுள்ளது. இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு அவர் தற்காலிக மாக பதவி நீக்கம் செய்யப்பட் டுள்ள நிலையில் தற்போதைய பிரதமர் வாங் யோ ஆன் இடைக்கால ஜனாதிபதியாக கடமையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி; பார்க் குவைன் ஹையின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியுடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனங்கள் பெயரில் நிதி திரட்டியதாகவும் அரசு பணி நியமனங்களில் தலையிட்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கெதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் மூன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதிக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.