163
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றுகாலை பாக்தாத் அருகேயுள்ள சட்ர் நகரில்; சிலர் வேலைக்காக வீதியோரம் காத்திருந்த வேளை அங்கு வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் ஒன்று வெடித்து சிதறியதில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை பாக்தாத் நகரில் உள்ள பிரபல சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love