குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் மக்களினால் அளிக்கப்பட்ட ஆணை ஒரு போதும் துஸ்பிரயோகம் செய்யப்படாது எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்தவுடன் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரி அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு உறுதியளித்திருந்தார் என தெரிவித்துள்ள ராஜித மஹிந்த ராஜபக்ஸவுடன் ஐக்கிய தேசியக் கட்சியினர் உறவுகளை பேணி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.