குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமல்ல இது என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தற்பொழுது இலங்கையில் ஆட்சி நடாத்துவது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அல்ல என குறிப்பிட்டுள்ள அவர் இந்த அரசாங்கம் ஓர் கூட்டு அரசாங்கம் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருவதாகவும், அமைச்சர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவும் மைத்திரியும் இணைந்து செயற்பட வேண்டும் – டிலான் பெரேரா
Jan 4, 2017 @ 18:21
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூட்டு எதிர்க்கட்சியினர் இணைந்து கொண்டால் யானையை தோற்கடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து பெரிய மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து செயற்பட்டால் யானையை தோற்கடிப்பதில் சிரமம் இருக்காது என சுட்டிக்காட்டியுள்ள அவர் மஹிந்தவுடன் இருக்கும் தரப்பினரும் மைத்ரியுடன் இருக்கும் தரப்பினரும் ஏனைய தரப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.