Home இந்தியாதமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்குமாறு தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்குமாறு தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

by admin

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு தொடர்பில்   விளக்கமளிக்குமாறு  மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.

சிவகாசியைச் சேர்ந்த பாலகணேசன் என்பவர்  தமிழகத்தில்  வறட்சி காரணமாக  பயிர்கள் கருகியதனால்  இதுவரை 100 பேர் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும்  பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

குறித்த மனுவை  விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய மற்றும் மாநில அரசுக்கு இது தொடர்பில் விளக்கமளிக்குமாறி கடிதம் அனுப்பியுள்ளதுடன்  வழக்கை பெப்ரவரி 8ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More