குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைச் சந்தேக நபர்களை கைது செய்ய அப்போதைய சட்ட மா அதிபர் அனுமதி வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரிய போதிலும் அதற்கு அனுமதியளித்திருக்கவில்லை எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்த அனுமதி கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சட்ட மா அதிபராக மொஹான் பீரிஸ் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாக தற்போதைய சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.