Home இலங்கைஇரு மீனவர்கள்  காணாமல் போயுள்ளனா்.

இரு மீனவர்கள்  காணாமல் போயுள்ளனா்.

by admin

 

யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்கள்  கடற்றொழிலுக்கு சென்ற     நிலையில் காணாமல் போயுள்ள நிலையில் காணாமல் போன    மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது

குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம்  குறித்து   கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்   அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின்   கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து    கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள பிரதானிகளுடன்    அவசர கலந்துரையாடலில் ஈடுபட்ட அவா்  மீனவர்களை  தேடும் பணியை உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கினார். இதற்கமைய தேடுதல் இடம்பெற்று வருகின்றது.

46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More