192
நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சமஷ்டியே சிறந்த முறையென தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா சமஷ்டி என்பது ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சியின் கீழேயே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட வேண்டுமென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டில் ,தான் இருந்தாலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே பிரச்சினைகளை தீர்க்க உகந்ததென தான் கருதுவதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஸ காலத்திலும் தான் சமஷ்டிக்கு ஆதரவாகவே குரல்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love