குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை மோதல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டமை நியாயமானதே என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள், சீனப் பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்த தருணத்தில் நிகழ்வு நடைபெறும் இடத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்தவர்களே கைது செய்யப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன் குழப்பங்களையும் விளைவித்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் அரச சொத்துக்கள் பல வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்பய்பட்டதாகவும் அது குறித்து எவரும் குரல் எழுப்பியதில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் கோதபாய ராஜபக்ஸவிற்கும், மஹிந்தவிற்கும் அஞ்சிய அவர்கள் ஒரு போதும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை எனவும் தற்போது அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.