சத்தீஷ்கர் மாநிலத்தில், 16 பெண்களை, பொலிசார் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிக்குமாறு அம்மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் எழுத்துமூல ஆணையை அனுப்பியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டில் சத்தீஷ்கர் மாநில பொலிசார் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதன் போது, பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை, பலாத்காரம் செய்தமை, அடித்து உதைத்து தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டமை, காரணமாக மாநிலத்தில் பொலிசாரால் 34 பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களிடம் மனிதஉரிமை ஆணையக பிரதிநிதிகள் நேரில் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இதில் 34 பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டதில் 16 பெண்கள் மட்டுமே பாலியல் வன்பணர்வுக்கு உட்பட்டு இருப்பதும் மற்றவர்கள் பலாத்காரம், தாக்குதல் போன்றவற்றில் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
இதேவேளை பல்வேறு சம்பவங்களில் மாநில பொலிசாரும் குற்றச் செயலில் ஈடுபட்ட பொலீசார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.