251
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலக்கு வரும் வகையில் மண்ணெண்ணை விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது.
தற்போது ஒரு லீற்றர் மண்ணெண்ணை 49 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. நாளை முதல் மண்ணெண்ணை விலை 44 ரூபாவாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Spread the love