தமிழகத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஜல்லிக்கட்டு தொடர்பாக ஜனாதிபதிக்கும் எழுதிய கடிதத்தில் தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டை அனுமதிப்பதில் யாருக்கு, என்ன ஆட்சேபனை இருக்க முடியும் என்று தெரியவில்லை எனவும் இது போன்ற விஷயங்களில் நடுநிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளர்h.
மனிதனுக்கு இணையாக மிருகங்களை வைக்க முடியாது. எடுத்துக்காட்டாக மீன் பிடிக்கும்போது தண்ணீரில் இருந்து மீன் வெளியே எடுக்கப்படுகிறது. அப்போது மூச்சுத்திணறி மீன் இறக்கிறது. இது மீனுக்கு இழைக்கப்படும் கொடுமை இல்லையா? இதனால் மீன் சாப்பிடுவது தடை செய்யப்பட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர் கொடுமைகள் எதுவும் நேராத வகையில் உரிய நிபந்தனைகள் விதித்து ஜல்லிக்கட்டை அனுமதிப்பதில் தவறு இல்லை என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளர்.