சென்னையின் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி நீரை எவ்வித தொய்வுமின்றி; வழங்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விடம், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் காலை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர் விஜயவாடா சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்ததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. சென்னை நகரும் குடிநீர் தேவைக்காக வடகிழக்கு பருவமழையையே நம்பியுள்ளது. எனவே, தெலுங்கு கங்கை திட்டத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். இது சென்னையின் குடிநீர் தேவைக்கு போது மானதல்ல. எனவே வரும் மாதங்களில் திறக்கப்படும் அளவை உயர்த்தி, குறைந்த பட்சம் 5 டிஎம்சி தண்ணீரையாவது வழங்க வேண்டுமென பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவிலும் தற்போது வடகிழக்கு பருவமழை குறைந்துள்ளது எனவும் தமிழகத்தின் கோரிக்கையை ஆக்கப்பூர்வமாக பரிசீலிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளர்h.