Home இலங்கைபிணை முறி மோசடி குறித்த அனைத்து விடயங்களையும் அம்பலப்படுத்துவேன் – தயாசிறி ஜயசேகர

பிணை முறி மோசடி குறித்த அனைத்து விடயங்களையும் அம்பலப்படுத்துவேன் – தயாசிறி ஜயசேகர

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிணை முறி மோசடி குறித்த அனைத்து விடயங்களையும் அம்பலப்படுத்துவேன் என கோப் குழுவின் உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் எதிர்வரும் 24ம் திகதி பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்த பாராளுமன்ற விவாதத்தில் அனைத்து விடயங்களையும் அம்பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பிணை முறி மோசடியின் ஊடாக நாட்டின் அப்பாவி மக்களது பணமே மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் ஒரு பக்கச்சார்பாக செயற்பட அனுமதிக்கப்பட முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் பிணை முறி மோசடிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தரப்பினர் சேற்றில் மூழ்க நேரிடும் எனவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் தப்பிச் செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More