Home இலங்கைநல்லாட்சி அரசாங்கத்தின் திட்டங்களை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது – மஹிந்த அமரவீர

நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டங்களை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது – மஹிந்த அமரவீர

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டங்களை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டமை நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான சர்வதேச அங்கீகாரத்தை பிரதிபலிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போதைய ஆட்சியாளர்களை சர்வதேச சமூகம் நிராகரித்த காரணத்தினால் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது எனவும் கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் அபிவிருத்தி அடைந்த நாடுகள் அனைத்தும் இலங்கை மீது கோபம் கொண்டிருந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வாதிகார ஆட்சி நடைபெறும் ஆபிரிக்க நாடுகள் சில மட்டுமே மஹிந்த அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தன என குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் நல்ல உறவைப் பேணி வருவதாகவும் இதனால் உலக நாடுகள் இலங்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More