குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாம் விரைவில் ஒய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தாம் விரைவில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் ஏனைய சில அரசியல்வாதிகளைப் போன்று அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருக்க தாம் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குடும்ப அரசியல் நிகழ்ச்சி நிரலற்ற ஓர் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் தமது குடும்பத்தின் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.