குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பருவ மழை பொய்து போனதனால் அதனை நம்பி வயல் விதைப்பில் ஈடுப்பட்டவா்களின் வயல்கள் அழிந்து விடும் நிலையில் காணப்படுகிறது.குறிப்பாக 46 ஆயிரம் ஏக்கா் வயல்களுக்கும் இன்னும் சில நாட்களுக்குள் மழை பெய்யாது விட்டால் அழிந்து விடும் நிலையில் காணப்படுகிறது.
இரணைமடுகுளத்தின் அபிவிருத்தி காரணமாக குளத்திலும் நீா் முற்றுமுழுதாக திறந்துவிடப்பட்டுள்ளமையால் இரணைமடுவிலிருந்தும் வயல்களுக்கு நீர் வழங்க முடியாத நிலையே காணப்படுகிறது. இதுவே பெரும் நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளது
இதனால் ஏனைய சிறு குளங்களிலிருந்து நீா் பெறப்பட்டு பல்வேறு மாற்றுவழிகளில் இரணைமடு குளத்தின் கீழான வயல்களுக்கு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேவேளை கிளிநொச்சியில் எஞ்சிய தங்களுடைய வயல்களை பாதுகாத்துக்கொள்ள விவசாயிகள் என்னென்ன வழிகளில் நீரைப் பெற்று பயிர்களை பாதுகாத்துக்கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் மேற்கொள்கின்றனா். குறிப்பாக வயல் நிலங்களில் குழாய் கிணறுகள் அமைத்தல், கிணறுகளில் இருந்து நீா்பம்பி மூலம் நீர் இறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனா்.
அந்த வகையில் இரணைமடுவுக்கு கீழ் காணப்படுகின்ற மருதநகா் வயல்களுக்கு கனகாம்பிகை குளத்திலிருந்து நூற்றுக்கணக்கான குழாய்கள் மூலம் வான்பாயும் வழி ஊடாக நீா் பெறப்பட்டு கிளிநொச்சிகுளத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மருதநகா் வயல்களுக்கு வழங்கும் மற்றொரு நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனா்.
முடிந்தளவுக்கு வயல்களை காப்பாற்றுவதற்காக கிளிநொச்சி விவசாயிகள் போராடுகின்றனா்