வடக்கு மாலியின் காவோ நகரில் உள்ள ராணுவ முகாமுக்கு அண்மையில் வெடிகுண்டு நிரப்பிய வாகனம் ஒன்றை செலுத்தி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி அதனை வெடிக்கச் செய்துள்ளதில் அப்பகுதியில் கூடியிருந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் 37 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் ஐ.நா. அமைதிப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலியில் 2013ம் ஆண்டு பிரான்ஸ் தமையிலான கூட்டுப்படை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, வடக்கு பகுதியை ஆக்கிரமித்திருந்த தீவிரவாத குழுக்கள் ஒடுக்கப்பட்ட போதிலும் இன்னும் சில பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் காணப்படுதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.