குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் இன்னமும் உருவாக்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இணைப்புக் காரியாலயத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை என்ற போதிலும் அதற்கான ஆறு இணை குழுக்களினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் இந்த அறிக்கைகளுக்கு அமைய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால், அந்த நிலமையானது ஒரு பயங்கரமான நிலைமையாகவே கருதப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
பரிந்துரைகளின் அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் நாடு இரண்டு துண்டுகளாக அல்ல ஒன்பது துண்டுகளாக பிளவடையும் என குறிப்பிட்டுள்ள அவர் இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்த அரசாங்கத்தினால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.