Home இலங்கைநிதி நகரை நிர்மாணிக்கும் பணிகள் 2018ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும்

நிதி நகரை நிர்மாணிக்கும் பணிகள் 2018ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நிதி நகரை நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் 2018ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்றைய  தினம் அமைச்சர் நிதி நகர நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளும் பகுதிக்கு; சென்றிருந்த வேளை இந்த திட்டத்திற்கு பொறுப்பானவர்கள் நிதி நகரை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பமாகும் திகதி பற்றி அமைச்சருக்கு தெளிவூட்டியுள்ளனர். காணிகளை பெற்றுக் கொள்ளும் பணிகளை தற்போது நிறுவனம் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டமாக நிதி நகரத் திட்டத்தை கருத முடியும் என  குறிப்பிட்டுள்ள அமைச்சர்  நிதி நகரம் தொடர்பில் மீனவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More