இங்கிலாந்தில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்துக்கள் பல தடைகளை எதிர்நோக்கியுள்ளன. இங்கிலாந்தின் தென்பகுதி கடுமையான உறைபனிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில ஹீத்ரோ விமான நிலையத்தின் நூற்றுக்கும் அதிகமான விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் லண்டன் நகர விமான நிலையத்தில் 37 விமானங்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக விமானப் போக்குவரத்துத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் லண்டன் முழுவதற்கும் மஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அவதான நிலையம் இவ் எச்சரிக்கையானது இங்கிலாந்தின் தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளிலும் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக லண்டன் முழுவதற்கும் மஞ்சல் எச்சரிக்கை
163
Spread the love