ஐ.பி.எல். சூதாட்டத்தில் கைது செய்யப்பட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீPசாந்துக்கு தடையில்லாத சான்றிதழ் வழங்க பி.சி.சி.ஐ. மறுத்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ரீPசாந்த் ஐ.பி.எல். போட்டியின்போது ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டமையினால் பி.சி.சி.ஐ. ஒழுங்கு நடவடிக்கைக்குழு அவருக்கு ஆயுட்கால தடை விதித்தது.
நீதிமன்ற விசாரணை அடிப்படையில் 2015-ல் ஸ்ரீசாந்த் விடுதலை செய்யப்பட்ட போதும் பி.சி.சி.ஐ. அவர் மீதான தடையை நீக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்னோட்டமாக ஸெ;காட்லாந்து கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக பி.சி.சி.ஐ.யிடம் தடையில்லாத சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்ததாகவும் எனினும் பி.சி.சி.ஐ. அவருக்கு தடையில்லாத சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஸ்ரீசாந்த் இந்திய தேசிய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 , டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.