158
தொல்லியல் திணைக்களத்தின் சிரேஷ்ட அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொல்லியல் மையங்களின் பாதுகாப்பு மற்றும் தொல்லியல் செயற்பாடுகள் தொடர்பிலுள்ள தடைகளை நீக்கி, அவற்றை முறைமைப்படுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
தொல்லியல் மையங்கள் மற்றும் தொல்லியல் பொருட்களை பாதுகாப்பது தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட கலந்தரையாடலின் போதே மேற்படி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
Spread the love