139
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கச்சத்தீவில் இந்திய கொடி ஏற்றப்படும் என இந்து மக்கள் கட்சி என்ற கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய தினம் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் இதனை முன்னிட்டு கச்சத்தீவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தமிழக மீனவர்களுக்கு பூரண உரிமையுண்டு எனவும் தமிழக அரசாங்கம் தேசிய கொடியை கச்சத்தீவில் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு தவறினால் தமது கட்சி தேசிய கொடியை ஏற்றும் எனவும் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
Spread the love