175
ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் மகா ராஷ்டிர மாநிலம் பிவண்டி நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்னிலையாகியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது 2014 மார்ச் 6ம் திகதி பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல், மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொலை செய்தனர் எனத் தெரிவித்திருந்தமை தொடர்பில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ராகுலுக்கு எதிராக் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நேற்றையதினம் விசாரணைக்கு வந்திருந்த போதே ராகுல் காந்தி முன்னிலையாகியுள்ளார். இதனையடுத்து அடுத்த விசாரணை மார்ச் 3ம்திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Spread the love