காவல்துறையினரின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் ஆய்வு நடத்தும் நோக்கில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை காவல்துறையினரின் நன்மதிப்பை உயர்த்தும் வகையில் காலத்திற்கு ஏற்ற வகையில் சீருடையில் மாற்றம் செய்யப்பட முடியுமா என ஆராயப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூகத்திடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சீருடை மாற்றம் குறித்த கருத்துக் கணிப்பு படிவத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு காவல் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.