குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் தொடர்ந்தும் நீடிக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கருத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க 19ம் திருத்தச் சட்டத்தின் கீழும் ஜனாதிபதியின் சில நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது எனவும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் முனைப்புக்கள் காணப்படுவதாகவும், ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டை உறுதி செய்ய நிறைவேற்று அதிகாரம் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களும் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.