சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் விதிமுறைகளை மீறியதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஆந்த்ரே ரசலுக்கு போட்டியில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 வயதான ஆந்த்ரே ரசல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இதுவரை 51 ஒருநாள் போட்டி, 43 இருபதுக்கு இருபது போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.
விளையாட்டு வீரர்கள் போட்டிகள் இல்லாத நேரங்களில் தங்கள் இருக்கும் இடத்தை சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையத்திடம் தெரிவிக்க வேண்டும் என விதிமுறை உள்ளது.
கடந்த 2015-ல் ரசல், மூன்று முறை இதனை தெரிவிக்க மறுத்ததினால் இது ஊக்க மருந்து பரிசோதனைக்கான விதிமுறை களை மீறிய செயலாகும் எனத் தெரிவித்து அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டி யிலும் விளையாட ஓராண்டு விதிக்கப்பட்டுள்ளது.