156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டும் , அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து சுதந்திர தினத்தன்று போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
சுதந்திர தினத்தன்று யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக அமைதி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம். வலிந்து காணாமல் ஆக்கபப்ட்டவர்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடு , தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் , ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வேண்டும், காணி சுவீகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், இனப்பிரச்சனைக்கு சர்வதேச விசாரணை தேவை, ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அமைதியாக போராட உள்ளோம்.
அன்றைய தினம் காவல் துறையை சேர்ந்தவர்கள் போராட்டத்தை குழப்பும் முகமாக செயற்பட்டு யாழ்.மாவட்ட செயலக சூழலை வன்முறை சூழலாக மாற்ற கூடாது என காவல்துறையினரிடம் கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்தார்.
Spread the love